Published : 03,Dec 2017 10:51 AM

மீனவர்களைக் கரைக்கு கொண்டுவர நடவடிக்கை இல்லை: கனிமொழி

kanimozhi-mp-Accusation-the-govt-for-rescue-fishers

கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை கரைக்குக் கொண்டுவர முறையான ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றம்சாட்டினார்.

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே நடந்த பேரணியில் பல அமைப்பினர் கலந்துகொண்டனர். இந்தப் பேரணியை திமுக எம்.பி கனிமொழி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காக உள்ள சட்டங்களை செயல்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டினார். 

கன்னியாகுமரி பகுதியிலேயே மத்திய அமைச்சர் இருந்தும் அப்பகுதி மக்களுக்கு எவ்வித பயனும் ஏற்படவில்லை என வருந்தினார். கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்களை கரைக்குக் கொண்டுவர முறையான ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்