
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நாளையுடன் நிறைவு பெறுகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 27 ஆம் தேதி தொடங்கிய நிலையில், முக்கிய வேட்பாளர்களாக அதிமுக சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருதுகணேஷ் மற்றும் சுயேட்சை வேட்பாளராக டிடிவி தினகரன் களத்தில் உள்ளனர். பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கரு.நாகராஜன், நடிகர் விஷால் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் இன்று அல்லது நாளை மனுதாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்புமனுதாக்கல் செய்வதற்கான காலக்கெடு நாளையுடன் நிறைவடைகிறது. வேட்புமனுக்களை திரும்பப்பெற டிசம்பர் 7 ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் துவங்கிய முதல் நாள் சுயேட்சை வேட்பாளர்கள் 3 பேர் மனுதாக்கல் செய்தனர்.