Published : 03,Dec 2017 03:26 AM

2 பேரை கொன்றுவிட்டு ஆத்திரம் தீராமல் ஆடு, மாடுகளை குத்திய கொடூர மனிதர்..!

Man-killed-his-mother-and-brother

தேனி அருகே பெற்ற தாய், சகோதரரை கடப்பாரையால் குத்தி கொலை செய்த நபர், ஆத்திரம் தீராமல் வீட்டில் இருந்த ஆடு, மாடு, நாய் ஆகியவற்றையும் கொலை செய்தார்.

தேனி அருகே உள்ள சடையால்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைசாமி, இவருக்கு புஷ்பா என்ற மனைவியும், ஜெயபால் மற்றும் சதிஷ் என்கிற இரு மகன்களும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக போதை பழக்கத்தினால் பாதிக்கபட்ட ஜெயபால் மன நோயாளியாக உள்ளார். இந்நிலையில் வீட்டில் இருந்த தனது தாய் புஷ்பா மற்றும் சகோதரர் சதிஷ், ஆகியோரை திடீரென கடப்பாரையினால் ஜெயபால் குத்தி கொலை செய்தார். அப்பொழுதும் வெறி அடங்காதவராய் மாட்டு கொட்டகையில் இருந்த பசு மாடு, ஆடு, நாய் ஆகியவற்றையும் அதே கடப்பாரையால் குத்தி கொன்றார். பின்னர் வீட்டின் முன்பு இருந்த குடிசைக்கும் தீ வைத்தார். குடிசையில் இருந்த 3 ஆடுகள் தீயில் கருகின.

இதையடுத்து கிராம மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர், 2 மணி நேர போராட்டத்துக்குப் பின் ஜெயபாலை கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்