முரளி விஜய் அடித்த பந்தில் காயமடைந்த இலங்கை வீரர் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியுடனான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், முதல் நாளில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 371 ரன்கள் குவித்துள்ளது.
டெல்லியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பாக விளையாடிய முரளி விஜய், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் 11ஆவது சதத்தை நிறைவு செய்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கோலியும் சதமடித்தார். டெஸ்ட் போட்டிகளில் கோலியின் இருபதாவது சதம் இதுவாகும். கோலி 156 ரன்களுடனும், ரோகித் ஷர்மா 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் முரளி விஜய் அடித்த பந்து பட்டு இலங்கை கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் சமரவிக்ரமா காயமடைந்தார். 30 வது ஓவரில் தில்ருவான் பெரேரா வீசிய பந்தை, ஸ்வீப்ட் ஷாட் அடித்தார் முரளி விஜய். அருகில் நின்ற சமரவிக்ரமாவின் நெற்றியில் பந்து தாக்கியது. அவர் ஹெல்மெட் அணிந்திருந்தாலும் அவருக்கு காயம் ஏற்பட்டது. மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது. அவர் ஆபாய கட்டத்தில் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இருந்தாலும் அவர் இன்றைய போட்டியில் பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது.
Loading More post
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
குடிநீரில் கலந்த கழிவுநீர்; மீனவ கிராமத்தை சேர்ந்த 11க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!