Published : 03,Dec 2017 02:29 AM

ஊழலின் உச்சம்: ராகுலை சாடிய அருண்ஜெட்லி

Arun-Jaitley-said-about-Rahul-and-Congress

பாஜக இந்துத்துவத்தை தொடர்ந்து ஆதரிக்கும் என்றும் மெய்யாக தாங்கள் உள்ளபோது ராகுல் போன்ற போலிகள் எதற்கு என்றும் மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி விமர்சித்துள்ளார்.

குஜராத் சட்டப்பேரவையின் முதல்கட்ட தேர்தல் வரும் 9ஆம் தேதியும், இரண்டாம்கட்ட தேர்தல் 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதற்காக பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் பிரச்சாரத்திற்காக குஜராத் சென்றிருந்த ராகுல் காந்தி, அங்குள்ள சோமநாத் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது அவர் வருகைப் பதிவில் கையெழுத்திட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக குஜராத் மாநிலம் சூரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அருண்ஜெட்லி, இந்துத்துவத்தை எப்போதும் ஆதரிக்கும் கட்சி பாஜக தான் என்றும், மெய்யாக நாங்கள் இருக்கும் போது போலியான ராகுலை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்தார். அத்துடன் மோடியின் தலைமையிலான ஆட்சி இந்தியாவில் பல அதிரடி மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் செய்து வருவதாக அவர் தெரிவித்தார். ஆனால் காங்கிரஸின் ஆட்சிக்காலம் ஊழலின் உச்சம் என்றும் அவர் விமர்சித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்