
ஆர்.கே.நகரில் போட்டியிடும் விஷாலுக்கு ஓட்டு போடுங்க என இயக்குநர் சுதீந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆர்.கே.நகரில் வரும் 21-ம் தேதி, இடைத்தேர்தல் நடைபெறுகிறது. ஆளும் அதிமுக சார்பில் மதுசூதனன் களமிறங்குகிறார். திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். இதுதவிர பாஜக சார்பில் கரு.நாகராஜன், சசிகலா அணி சார்பில் தினகரன் போட்டியிட உள்ளனர். நாம் தமிழர் சார்பில் போட்டியிடும் கலைக்கோட்டுதயமும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே திடீர் வரவாக ஆர்.கே.நகரில் சுயேட்சையாக போட்டியிடுவதாக விஷால் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். நாளை அவர் வேட்புமனுத் தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில் ஆர்.கே.நகரில் போட்டியிடும் விஷாலுக்கு ஓட்டு போடுங்க என இயக்குநர் சுதீந்திரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், " 'தமிழ்' என்ற ஒரு சொல்லை பயன்படுத்தி அரசியல் வியாபாரம் செய்யாமல், நல்லவர் யார் வந்தாலும் நமக்கு நல்லது. விஷால் உண்மைக்கும் நல்லவர். அரசியல் மாற்றம் வேண்டுமென்று நினைப்பவர். விஷாலுக்கு ஓட்டு போடுங்க. மக்களுக்காக உண்மையாக உழைப்பார். விஷாலுக்காக பிரச்சாரம்
செல்வேன். மாற்றம் வராதா என்ற ஏக்கத்துடன் இருக்கும் தம்பிகள் விஷாலுக்கு ஓட்டு போடுவார்கள்" என தெரிவித்துள்ளார்.