கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க அதிகப்படியான ஹெலிகாப்டர்களை அனுப்ப வேண்டும் என உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்கக்கடலில் உருவான ஒகி புயல் கன்னியாகுமரியை புரட்டி போட்டுள்ளது. அதுமட்டுமில்லால் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களும் பல்வேறு பாதிப்புகளை சந்தித்துள்ளன. ஒகி புயலுக்கு முன்னால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் புயலின் காரணமாக கடலில் மாட்டிக்கொண்டனர். கன்னியாகுமரியைச் சேர்ந்த 500-க்கும் அதிகமான மீனவர்கள் கடலில் சிக்கி கொண்டதால் அவர்களது உறவினர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதுமட்டுமில்லாமல் கன்னியாகுமரியில் கடல் சீற்றத்தால் விசைப்படகு உடைந்ததிலும் 10 மீனவர்கள் கடலில் தத்தளித்து வருகின்றனர்.
எனவே கடலில் சிக்கியுள்ள மீனவர்களை விரைந்து மீட்டுத் தரும்படி அவர்களது உறவினர்கள் அரசிடம் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். இதனிடையே இன்று குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை பார்வையிட வந்த சிறப்பு அதிகாரி ராமசந்திரன் வந்தார். அப்போது அவரை முற்றுகையிட்ட ஊர்மக்கள், மீனவர்களை விரைந்து மீட்டுத் தரும்படி கோரிக்கை வைத்தனர். மேலும் வெறும் 100 மீனவர்கள் மட்டுமே காணாமல் போனதாக அதிகாரிகள் கூறுவதாக புகார் தெரிவித்தனர். அப்போது, இதுவரை 58 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன மற்ற மீனவர்களையும் மீட்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ராமசந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
மீனவர்கள் காணாமல் போனது பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், மீனவர்களை மீட்க கடற்படை, விமானப்படை துரித நடவடிக்கை எடுத்து வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார். 8 கப்பல்கள் , 5 விமானங்கள் மூலம் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை விளக்கம் அளித்துள்ளது.
இந்நிலையில் கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்க அதிகப்படியான ஹெலிகாப்டர்களை அனுப்ப வேண்டும் என உள்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுவரை கரை திரும்பாத மீனவர்களை விரைந்து மீட்க அரசு உதவ வேண்டும் எனவும் உள்துறை அமைச்சரிடம் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனிடையே, பலத்த காற்று வீசுவதன் காரணமாக ராமநாதபுரம் மீனவர்கள் கடலுக்குச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதனால் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் ஆகிய துறைமுகளில் 800-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 2 லட்சம் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாததால் நாளொன்றுக்கு 3 கோடி ரூபாய் அளவில் வர்த்தக பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதியில் கடல் சீற்றத்துடன் பலத்த காற்று வீசுவதால் வேதாரண்யம் மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'