Published : 02,Dec 2017 05:52 AM

உருவாகிறதா அடுத்த புயல்..?

chances-for-next-cyclone

தமிழகத்தில் ஆங்காங்கே இன்று கனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, அந்தமான் கடல் பகுதியில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறலாம் எனவும் கூறப்டுகிறது.

வங்கக்கடலில் உருவான ஒகி புயல் கன்னியாகுமரியை புரட்டி போட்டது. அத்தோடு தென் தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. சென்னையிலும் விட்டு விட்டு மழை பெய்தது. ஒகி புயலால் பாதிப்பிற்குள்ளான கன்னியாகுமரியில் மீட்புப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் ஆங்காங்கே இன்று கனமழை பெய்யக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் நாளை தமிழகத்திற்கு மழை எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. எனினும் 4, 5 மற்றும் 6-ம் தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தமான் கடல் பகுதியில் தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை 2 அல்லது 3 நாட்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினால் அதற்கு 'சாகர்' எனப் பெயர் சூட்டப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்