Published : 02,Dec 2017 02:58 AM
சென்னையில் செஞ்சுரி அடித்த மழை

கடந்த இரண்டு மாதங்களில் சென்னையில் பெய்த மழை அளவு சென்டி மீட்டரில் சதம் அடித்திருக்கிறது.
வெப்பச் சலனம் மற்றும் தென்மேற்குப் பருவ மழையின் இறுதிக் காலத்தில் அக்டோபரின் முதல் மூன்று வாரங்களில் சென்னையில் அடிக்கடி மழை பெய்தது. இந்நிலையில், அக்டோபர் நான்காவது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய நிலையில், 28ஆம் தேதி தொடங்கி நவம்பர் முதல் வாரம் வரை சென்னையில் பலத்த மழை பெய்தது.
பிறகு சில வாரங்கள் மழை இடைவெளி விட்ட நிலையில், ஒகி புயல் காரணமாக கடந்த சில நாட்களாக அவ்வப்போது சென்னையில் மழை பெய்து வருகிறது. இதனால், அக்டோபர், நவம்பர் ஆகிய இரண்டு மாதங்களில் மட்டும் சென்னையின் மழையளவு 100 சென்டி மீட்டரைத் தாண்டியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.