நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட், வெஸ்ட் இண்டீஸ் அணி 134 ரன்னில் சுருண்டது.
வெஸ்ட்இண்டீஸ் - நியூசிலாந்து அணிகள் இடையே 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டனில் நேற்று தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இனனிங்சில் 45.4 ஓவர்களில் 134 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் நீல் வாக்னர் 39 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை அள்ளினார்.
வெஸ்ட்இண்டீஸ் அணியில் அறிமுக வீரராக அடியெடுத்து வைத்த சுனில் அம்ப்ரிஸ், தான் சந்தித்த முதல் பந்தில் ‘ஹிட் விக்கெட்’ முறையில் வெளியேறினார். டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர் ஒருவர், முதல் பந்திலேயே ‘ஹிட் விக்கெட்’ ஆவது இதுவே முதல் நிகழ்வாகும்.
சிறப்பாக ஆடிய ராஸ் டெய்லர் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 93 ரன்களுக்கு அவுட் ஆனார். இதையடுத்து நிக்கோலஸும், சண்ட்னரும் ஆடிவருகின்றனர். காலை 8.20 மணி நிலவரப்படி, முதல் இன்னிங்ஸில் நியூசிலாந்து அணி, 4 விக்கெட் இழப்புக்கு 267 ரன்கள் எடுத்துள்ளது.
Loading More post
சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் -இந்தியாவை நோக்கி பார்வையை திருப்பும் ஆப்பிள் நிறுவனம்
பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் அளவுக்கு அதிகரிப்பு - ஏஐசிடிஇ
எல்ஐசி சந்தை மதிப்பு நான்கே நாட்களில் ரூ.77,600 கோடி சரிவு
ஹைதராபாத்: சாதி மறுப்பு திருமணம் - இளைஞர் ஆணவப் படுகொலை
நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதி 8 பேர் பலி; திருமணம் முடிந்து திரும்பும்போது சோகம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!