Published : 22,Feb 2017 02:10 AM

ஐஎஸ் இயக்கத்திற்கு நிதி வசூலித்த விவகாரம்: சென்னை இளைஞர் கைது

IS-fund-issue--Rajasthan-police-enquires-Chennai-youth

ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்ட இளைஞரிடம் ராஜஸ்தான் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சென்னையில் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக ராஜஸ்தானில் கைதான ஜமீல் அகமது என்பவர் கொடுத்த தகவலின்பேரில், சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த முகமது இக்பாலை ராஜஸ்தான் போலீஸார் தேடி வந்தனர். தங்கம் கடத்திய வழக்கில் புழல் சிறையில் இருந்த அவரை, உரிய அனுமதி பெற்று கோட்டூர்புரம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தப்பட்டது. சென்னையில் 4 பேர் மூலம் ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு 3 லட்ச ரூபாய் வரை நிதி வசூலித்து கொடுத்திருப்பதாகவும், அவர்கள் யார் என தொடர்ந்து விசாரித்து வருவதாகவும் ராஜ‌ஸ்தான் போலீஸார் தெரிவித்தனர். முகமது இக்பாலிடம் நாளை வரை விசாரணை நடத்தப்படும் என்றும் அதன்பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்