[X] Close

134 ரன்களில் வெஸ்ட் இண்டீஸை சுருட்டிய நியூசிலாந்து

new-zealand-vs-west-indies-test-match-first-day

நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 134 ரன்களில் சுருண்டது.

நியூசிலாந்தின் வெலிங்டன் நகரில் நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே டெஸ்ட் போட்டி தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் விக்கெட்டிற்கு 59 ரன்கள் சேர்த்தது. பின்னர் நெய்ல் வாக்னரின் பந்துவீச்சில் வெஸ்ட் இண்டீஸ் அணி விக்கெட்களை இழந்து தடுமாறியது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்டத்தில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களில் சுருண்டது. 

நியூசிலாந்தின் வாக்னர் 39 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்களைக் கைப்பற்றினார். பின்னர் விளையாடிய நியூசிலாந்து அணி முதல் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close