
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் போட்டியிடப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தனது நண்பர்களுடன் நடிகர் விஷால் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, போட்டியிடுவது குறித்து திங்கட்கிழமை விஷால் அறிவிப்பார் என்று கூறப்படும் நிலையில், அன்றைய தினம்தான் வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். நடிகர் சங்க பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகவும் நடிகர் விஷால் இருந்து வருகிறார்.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிட்டால், இப்போது நிலவும் நான்கு முனைப் போட்டி ஐந்து முனைப் போட்டியாக மாற வாய்ப்புள்ளது. ஏற்கனவே, அதிமுகவின் மதுசூதனன், திமுகவின் மருதுகணேஷ் ஆகியோரும் டிடிவி தினகரன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் கலைக்கோட்டுதயம் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றனர்.