[X] Close

சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றலாமா..? பதிலளிக்கிறார் பி.வி.ஆச்சார்யா

P--V--Acharya-About-Sasikala-Case

கர்நாடக சிறையில் இருந்து தமிழக சிறைக்கு சசிகலாவை மாற்றுவது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தான் முறையிட முடியும் என்று சொத்துக்குவிப்பு வழக்கில் ஆஜரான கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா தெரிவித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பான கேள்விகளுக்கு புதியதலைமுறையிடம் அவர் அளித்த விளக்கங்கள்..

கேள்வி: கர்நாடாக சிறையில் இருந்து சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்ற வாய்ப்பு இருக்கிறதா? வாய்ப்பு இருந்தால் என்ன மாதிரியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்?

பதில்: கர்நாடக சிறையில் இருந்து வேறு எந்த மாநிலத்திற்கோ அல்லது சென்னை சிறைக்கோ மாற்ற வேண்டுமென்றால், உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் முடியாது. அவர்கள் எந்த அடிப்படையில் மனுதாக்கல் செய்வார்கள் என்பது தெரியவில்லை. வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்றால் சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்க முடியாது. இதில் முடிவு செய்வதற்கு உச்ச நீதிமன்றத்திற்கு தான் அதிகாரம் உள்ளது. ஆகையால், உச்ச நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் அவர்களால் வேறு சிறைக்கு மாற முடியாது.


Advertisement

கேள்வி: இந்த வழக்கில் ஜெயலலிதா முதல் குற்றவாளியாக உள்ளார். ஆகையால், வழக்கில் இணைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் சொத்துக்களின் நிலை என்ன? நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

பதில்: வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தையும் அரசு பறிமுதல் செய்யும். சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அந்த சொத்துக்கள் அனைத்தும் உரிமையாளருக்கு சொந்தமாகாது. ஏனென்றால் அவற்றை பறிமுதல் செய்யும் அதிகாரம் அரசுக்கு இருக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close