[X] Close

ஒகி புயல் பாதிப்பு: தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்

MK-Stalin-request-to-cadres

ஒகி புயல் மற்றும் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகி புயலால் கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். புயல், மழையால் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்ட பின்பும் அரசு விரைந்து நிவாரண பணிகள் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ள அவர், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதிலும் அக்கறை செலுத்தவில்லை என சாடியுள்ளார்.

ஆகவே, திமுக எம்எல்ஏக்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close