[X] Close

கனமழை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

Heavy-Rain--school-and-colleges-leave-for-various-districts

கனமழை காரணமாக பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒகி புயல் பாதிப்பைத் தொடர்ந்து, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (01-12-2017)  விடுமுறை விடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கனமழை காரணமான சென்னை, தேனி, விழுப்புரம், திண்டுக்கல், காஞ்சிபுரம், திருவள்ளூர், சேலம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், உதகை, கோத்தகிரி, குந்தா பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.  சிவகங்கை மாவட்டத்தில் சிவகங்கை, காளையார் கோயில், மானாமதுரை, இளையான்குடி, திருபுவனம், ஆகிய 5 தாலுக்காக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close