Published : 30,Nov 2017 02:17 PM

ஆர்.கே நகரில் திமுகவுக்கு மார்க்சிஸ்ட் ஆதரவு

CPM-Support-DMK-in-RK-Nagar-ByElection

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளர்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மருது கணேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிடுவது தற்போது வரை உறுதியாகி உள்ளது. திமுகவிற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து முடிவு எடுப்பதற்காக கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.கே.நகர் தேர்தலில் திமுகவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளிப்பதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்