Published : 30,Nov 2017 01:28 PM

கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

Ockhi-cyclone--Tomorrow-holiday-for-school-and-colleges-in-kanyakumari

கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி அருகே நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் இன்று காலை ஒகி புயலாக மாறியது. இதனால் கன்னியாகுமரி பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது. ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. போக்குவரத்தும் பல இடங்களில் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ஒகி புயல் தற்போது கன்னியாகுமரியை விட்டு விலகிச்செல்ல தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (01-12-2017) ஒருநாள் மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட ஆட்சியர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்