பால் வண்டியில் ஒன்றரை லட்சம் கொள்ளை

பால் வண்டியில் ஒன்றரை லட்சம் கொள்ளை
பால் வண்டியில் ஒன்றரை லட்சம் கொள்ளை

சென்னையை அடுத்து பூந்தமல்லியில் பால் ஏற்றி வந்த சரக்கு வாகனத்தில் இருந்து ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்று உள்ளனர். 

பரமசிவம் என்பவர் பூந்தமல்லியை சுற்றியுள்ள கடைகளில் பால் பாக்கெட்டுகளை இறக்குமதி செய்யும் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இன்று எம்.ஜி. நகரில் உள்ள கடையில் பால் பாக்கெட்டுகளை இறக்கி விட்டு வண்டியில் சென்று பார்த்தபோது அவர் வைத்திருந்த பணப்பெட்டியை காணவில்லை. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். 

அதில் பால் வண்டியை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்கள் இரண்டு பேர் பணப்பெட்டியை கொள்ளை அடித்தது தெரிய வந்தது. இதனையடுத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ள நபர்களை காவல் துறையினர் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.  

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com