சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதலாக நியமிக்கப்பட்ட 6 நீதிபதிகள் நாளை காலை பதவியேற்கின்றனர்.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக 6 நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை மத்திய சட்ட அமைச்சகத்தின் இணை செயலாளர் ராஜிந்தர் காஷ்யப் வெளியிட்டுள்ளார். ராமதிலகம், தாரணி, கிருஷ்ணவள்ளி, ஹேமலதா, ராஜமாணிக்கம், பொங்கியப்பன் ஆகியோர் அந்தப் புதிய நீதிபதிகள் ஆவர்.
சேலம் மாவட்ட சிறப்பு நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக உள்ள ராமதிலகம், கடலூர், காங்கயம், கோபி, தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு கீழ்நீதிமன்றங்களில் பணியாற்றியவர். நீதிபதி ஹேமலதா, மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றத்தின் கூடுதல் மாவட்ட நீதிபதியாக உள்ளார். கிருஷ்ணவள்ளி திருச்சி, கடலூர், நாகர்கோவில், விருதுநகர் உள்ளிட்ட நீதிமன்றங்களில் பணியாற்றியவர். பொங்கியப்பன், திருச்சி, நாமக்கல், திருப்பூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பல நீதிமன்றங்களில் பணியாற்றியவர். இந்நிலையில் இந்த ஆறு நீதிகளும் நாளை காலை 9.30 மணியளவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்றுக் கொள்ள உள்ளனர்.அவர்களுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
Loading More post
உக்ரைன் வணிக வளாகம் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி! 50பேர் படுகாயம்!
இது வயிறா? இல்ல டூல் பாக்ஸா? - நோயாளியின் வயிற்றை பார்த்து ஷாக்கான மருத்துவர்கள்!
நள்ளிரவில் சென்னையை குளிர்வித்த மழை... தமிழகத்தில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!
சோனியா காந்தியின் பி.ஏ பிபி மாதவன் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு!
ஒரேயொரு முறை... ஒரேயொரு வாய்ப்புதானா வாழ்க்கைக்கு? #MorningMotivation #Inspiration
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai