விதிமுறையை மீறி தாக்குதல்: மூத்த சுமோ வீரர் ராஜினாமா

விதிமுறையை மீறி தாக்குதல்: மூத்த சுமோ வீரர் ராஜினாமா
விதிமுறையை மீறி தாக்குதல்: மூத்த சுமோ வீரர் ராஜினாமா

ஜப்பானின் சுமோ சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரரான ஹருமாபுஜி, சக வீரரை விதிமீறி தாக்கியதற்கு பொறுப்பேற்று, சுமோ விளையாட்டில் இருந்த ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தனது 16வது வயதில் சுமோ விளையாட்டில் காலடி எடுத்து வைத்த ஹருமாபுஜி, படிப்படியாக உயர்ந்து அந்த விளையாட்டின் உச்சபட்ச நிலையை கடந்த 2012ஆம் எட்டினார். இதைத் தொடர்ந்து சுமோ சாம்பியனாக வலம் வந்த ஹருமாபுஜி, அண்மையில் நடந்த ஒருபோட்டியின் இடைவேளையின்போது, தன்னை விட அனுபவம் குறைந்த சுமோ வீரரை விதிமீறி தாக்கியதாக புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து அதற்காக பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஹருமாபுஜி, சுமோ விளையாட்டு போட்டியில் இருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com