[X] Close

ரோஹிங்ய பெண்களுக்கு பாலியல் சித்ரவதை: அறிக்கை அளிக்க ஐ.நா. உத்தரவு

un-asking-report-from-myanmar-for-sexual-harassment-on-rohingya-women

ரோஹிங்ய இன பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட பாலியல் சித்ரவதைகள் தொடர்பான அறிக்கையை ஆறு மாதங்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என மியான்மர் அரசுக்கு ஐ.நா.வின் பெண்கள் நல அமைப்பு உத்தரவிட்டுள்ளது.


Advertisement

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் வசித்து வரும் ரோஹிங்ய இன இஸ்லாமியர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் அடக்குமுறையை கையாண்டு வருகிறது. இதன் காரணமாக சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வங்கதேசத்தில் அகதிகளாக அடைக்கலம் புகுந்துள்ளனர். அவர்களில் பலர் தங்கள் இன பெண்களையும், சிறுமிகளையும், ராணுவத்தினர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கண்ணீர் மல்க குற்றம்சாட்டியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக ஐ.நா.வின் பெண்கள் நல அமைப்பு முன் வந்துள்ளது. வன்முறை பரவியது முதல்‌ இதுவரை எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை ஆறு மாதங்களுக்குள் தாக்கல் செய்யும்படி மியான்மர் அரசுக்கு, அந்த அமைப்பு உத்தரவிட்டுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close