[X] Close

வன்கொடுமைக்குள்ளான பெண் மீதே வழக்கு: சென்னையில் கண்டனப் போராட்டம்

The-case-against-the-woman-in-the-disgraced--the-protest-in-Chennai

கிருஷ்ணகிரி மாவட்டம் கீழ்கொச்சாவூரில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி மீதே சிபிசிஐடி வழக்கு தொடர்ந்துள்ளதை கண்டித்து சென்னையில் போராட்டம் நடைபெற்றது. 

சிறுமி வன்கொடுமை வழக்கின் விசாரணை நகலை, எழும்பூரிலுள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகம் முன் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். 2014ஆம் ஆண்டு சிறுமியை வன்கொடுமையை செய்தவர்களை காப்பாற்றும் வகையிலேயே சிபிசிஐடியின் 750 பக்க விசாரணை அறிக்கை உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கங்கள் குற்றஞ்சாட்டின. 

பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், மின் இணைப்பு துண்டிப்பு, கடைகளில் பொருட்கள் வழங்க மறுப்பு என தொடர்ந்து அவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close