நடிகை தீபிகா படுகோன் நடித்து வெளியாகவுள்ள பத்மாவதி திரைப்படத்தை வெளிநாடுகளில் திரையிடுவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
ராஜபுத்திர வம்சத்தினரை தவறாக சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி, இந்தத் திரைப்படத்தை நாடு முழுவதும் திரையிட பல்வேறு அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். ராஜஸ்தான், மகாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாநில பாரதிய ஜனதா தலைவர்களும் இந்தத் திரைப்படத்தை வெளியிட ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வெளிநாடுகளிலும் இத்திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடைக் கோரி, எம்.எல். சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு முன் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய தணிக்கைக் குழு இந்தத் திரைப்படம் குறித்து இறுதி முடிவை எடுக்காத நிலையில், ஏன் இத்தகைய மனுக்களை தாக்கல் செய்கிறீர்கள்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பி, மனுவை தள்ளுபடி செய்தனர். அத்துடன் உயர் பதவியில் உள்ளவர்கள் தெரிவித்து வரும் கருத்துகளுக்கும் நீதிபதிகள் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.
Loading More post
ஆந்திரா: புதிய மாவட்டத்திற்கு அம்பேத்கர் பெயரை வைப்பதா? கலவரத்தால் 144 தடை
‘தோனியுடன் அவரை ஒப்பிடாதீர்கள்; அது நியாயமில்லை’-இளம் வீரரின் கேப்டன்ஷிப் குறித்து கங்குலி
"பெரிய நடிகர்களின் படங்களுக்கே மக்கள் தியேட்டர் செல்கின்றனர்”- கே.எஸ் ரவிக்குமார்
முடியாதவற்றை முடித்துக்காட்டியுள்ளோம்! - ஓராண்டு சாதனைக்கூட்டத்தில் முதல்வர் பேச்சு
சாதிக்கு எதிராக சமத்துவம் பேசும் 'நெஞ்சுக்கு நீதி' - ஆர்ட்டிக்கிள் 15 குறித்த விவாதங்கள்
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!
அழிவின் விளிம்பில் ஆமைகள்.. தெரிந்து கொள்ள வேண்டிய அரிய தகவல்கள்! #WorldTurtleday
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!