
ஆக்ரோஷ ஆட்டம்தான் எனது பாணி, அப்படித்தான் ஆட விரும்புகிறேன்’ என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி கூறினார்.
இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 267 பந்துகளில் 213 ரன்கள் குவித்தார் விராத் கோலி.
போட்டியில் பெற்ற வெற்றிக்குப் பின் பேசிய கோலி, ‘நான் வேகமாக ஆடி ரன்குவிக்க நினைத்தேன். அதனால்தான் ஆக்ரோஷமாக ஆடினேன். விரைவாக ரன் குவித்தால்தான் எதிரணியினரை வீழ்த்த பவுலர்களுக்கு அவகாசம் கிடைக்கும். வெளிநாடுகளிலும் இதுபோன்ற அணுகுமுறை வேண்டும். நான் அங்கும் அப்படிதான் செயல்பட இருக்கிறேன். பெரிய சதங்கள் மூலம் என் ஆட்டத்தை மேம்படுத்த எப்போதும் விரும்புகிறேன். அணிக்கு அது பயனளிக்கும் என்பதால்தான் இப்படி செய்கிறேன். நீண்ட நேரமாக தாக்குப்பிடித்து களத்தில் நிற்பதற்கு எனது ‘பிட்’னஸும் காரணம். தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடுவதற்காக இங்குள்ள பிட்ச்களை வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைக்க கோரினோம். ஆனால் நாக்பூர் பிட்ச், இரண்டாவது நாளே சுழல்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறிவிட்டது’ என்றார்.