Published : 28,Nov 2017 01:57 AM

கழுதைகளை சிறை வைத்த உ.பி. காவல்துறை

Donkeys-spend-4-days-in-UP-police-custody


உத்தரப் பிரதேச மாநிலத்தின் உராய் மாவட்ட சிறை ஒன்றில், கழுதைகள் 4 நாள்களாக சிறைத் தண்டனை அனுபவித்துள்ளன.

உத்தரப் பிரதேச மாநிலம் உராய் மாவட்ட சிறை வளாகத்தின் வெளியே, சிறை அதிகாரி ஒருவரால் வளர்க்கப்பட்ட செடிகளை, அப்பகுதியில் சுற்றிய கழுதைகள் சேதப்படுத்தியிருக்கின்றன. கழுதைகள் உண்டு மற்றும் சேதப்படுத்திய செடிகள் ரூ.5 லட்சத்திற்கு சமீபத்தில்தான் வாங்கப்பட்டுள்ளன. இதையடுத்து கழுதைகளை சிறைப்பிடித்த சிறைக்காவலர்கள், அவற்றை 4 நாள்களாக சிறைக்குள் பூட்டி வைத்தனர்.

இதுதொடர்பாக கழுதைகளின் உரிமையாளர் காவல் அதிகாரியை சந்தித்து விடுவிக்குமாறு கேட்டுள்ளார். காவலர்கள் விடுவிக்க மறுத்துள்ளனர். இதனையடுத்து அரசியல் பிரமுகர் ஒருவரின் மூலம் கழுதைகளின் உரிமையாளர் சமாதானம் பேசியதையொட்டி, சிறையிலிருந்த கழுதைகளை காவலர்கள் விடுவித்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்