நாளை இந்தியா வருகிறார் ட்ரம்ப் மகள் இவாங்கா

நாளை இந்தியா வருகிறார் ட்ரம்ப் மகள் இவாங்கா
நாளை இந்தியா வருகிறார் ட்ரம்ப் மகள் இவாங்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் மகள் இவாங்கா அரசுமுறை பயணமாக நாளை காலை இந்தியா வருகிறார்.

இந்தியா மற்றும் அமெரிக்கா சார்பில் சர்வதேச தொழில்முனைவோர் உச்சி மாநாடு ஹைத‌ராபாத்தில் நாளை நடக்கவுள்ளது. இந்த மாநாட்டை தொடங்கி வைக்க வரும்படி பிரதமர் மோடி விடுத்த அழைப்பின்பேரில், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் மகள் இவாங்கா நாளை காலை இந்தியா வருகிறார். அவரது கணவர் ஜேரட் குஷ்னரும் உடன் வருகிறார். பெண் தொழில்முனைவோரை மையப்படுத்தி நடக்கும் விவாதங்களில் பங்கேற்கும் இவாங்கா, புதிய கண்டுபிடிப்புகள், திறன் மற்றும் அதை வளர்த்துக் கொள்வதற்கான பயிற்சிகள் குறித்து விவரிக்கிறார்.

இந்த உச்சி மாநாடு நடக்கும் பலுக்நமா அரண்மனை சிறப்பு வாய்ந்தது. உலகின் மிகப் பெரிய உணவு அரங்கம் கொண்ட இந்த அரண்மனையில் ஒரே நேரத்தில் 101 விருந்தினர்கள் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிட முடியும். இவாங்கா ட்ரம்ப் ஹைதராபாத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சார்மினாரையும் சுற்றிப் பார்க்கவுள்ளார். அதன் பின் வரும் 29 ஆம் தேதி இரவு மீண்டும் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கிறார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com