[X] Close

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் நவ.29ல் அறிவிப்பு

RK-Nagar-Election-Admk-candidate-name-will-be-announced-in-Nov-29

ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பெயர் நவம்பர் 29-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வேட்பாளரை தேர்வு செய்வதற்கான உயர்மட்டக் குழு கூட்டம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. அதில், வேட்பாளரை தேர்வு செய்து நாளை மறுநாள் (29ஆம் தேதி) அறிவிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது. 

இந்தக் கூட்டத்தில், ஆட்சிமன்ற குழுவில் முதலமைச்சர் பழனிசாமி, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, பா.வளர்மதி ஆகியோரை புதிதாக சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே ஆட்சிமன்றக் குழுவில் உள்ள ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், ஜஸ்டின் செல்வராஜ், தமிழ்மகன் உசேன், பி.வேணுகோபால் ஆகியோரை சேர்த்து மொத்தம் 9 பேர் கொண்ட புதிய குழு அறிவிக்கப்பட்டது. 


Advertisement

இந்த ஆட்சிமன்றக்குழு ‌கூடி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை தேர்வும் செய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மறுக்கள் பெறப்பட்டு, அதன் அடிப்படையில் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement
[X] Close