[X] Close

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: புனேவுக்கு முதல் வெற்றி

Indian-Super-League--Pune-thrash-ATK-4-1


நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் புனே சிட்டி அணி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.


Advertisement

நான்காவது ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைப்பெற்ற லீக் சுற்று போட்டியில் புனே சிட்டி அணி நடப்புச் சாம்பியன் கொல்கத்தா அணியுடன் பலப்பரீட்சை நடத்தியது. இந்தப்போட்டி கொல்கத்தாவில் நடைப்பெற்றது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய புனே சிட்டி அணி 4-1 என்ற கோல் கணக்கில் புனே அணி வெற்றி பெற்றது. முதல் ஆட்டத்தில் டெல்லி அணியிடம் தோல்வி அடைந்திருந்த புனே சிட்டி அணி, இரண்டாவது போட்டியில் நடப்புச் சாம்பியனான கொல்கத்தாவை வீழ்த்தியுள்ளது.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதி போட்டிக்கு தகுதி பெறும்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close