ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அதிமுகவில் யார் வேட்பாளர் என இன்று அறிவிக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. தண்டையார்பேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் காலை 11 மணி முதல் 3 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மனு தாக்கல் செய்ய அடுத்த மாதம் 4ஆம் தேதி கடைசி நாளாகும்.
இதற்கிடையே, வேட்புமனு தாக்கலுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மனு தாக்கல் செய்ய வருவோர் கார்களில் அணிவகுத்து வரக்கூடாது என்றும், 5 பேர் மட்டுமே தேர்தல் நடத்தும் அதிகாரி அறைக்குள் வர வண்டும் என்றும் தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தெரிவித்துள்ளார். இதனிடையே டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் தரப்பில் தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்ட கடிதத்தில், வரும் ஒன்றாம் தேதி பிற்பகல் ஒரு மணிக்கு டிடிவி தினகரன் வேட்புமனு தாக்கல் செய்ய நேரம் ஒதுக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
Loading More post
”அடுத்த சீசனில் இந்த இளம் பவுலர் நிச்சயம் சிறப்பாக விளையாடுவார்” - தோனி சொன்ன அந்த வீரர்?
‘நான் சொன்ன கருத்தைத்தான் பிரதமரும் எதிரொலிக்கிறார்‘ - கிச்சா சுதீப்பின் புதிய கமெண்ட்!
மாநிலங்களவை தேர்தல் வேட்பாளர்களை தேர்வுசெய்வதில் அதிமுகவில் நீடிக்கும் இழுபறி!
இம்ரான் தாஹிரின் மிகப்பெரிய சாதனையை சமன் செய்தார் சாஹல்! என்ன சாதனை?
லக்னோவில் 10 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் வசித்த மகள்! என்ன காரணம்?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!