Published : 26,Nov 2017 05:00 PM
சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு தூக்கு: ம.பி. அரசு ஒப்புதல்

சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க மத்தியப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
சிறார்களுக்கு எதிரான கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனையை விதிக்கும் வகையில் பொது பாதுகாப்பு மசோதாவை மத்தியப் பிரதேச மாநில அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி, 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு அமைச்சரவையில் ஒப்புதல் தரப்பட்டிருக்கிறது.
கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிகவும் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. மேலும், பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு அபராதம் மற்றும் தண்டனை அதிகரிக்க செய்யும் மசோதாவிற்கும் மத்தியப் பிரதேச அமைச்சரவை ஒப்புதல் தந்துள்ளது.