Published : 26,Nov 2017 04:39 PM
ஐஎஸ்எல் போட்டியில் அநாகரீகமாக நடந்து கொண்ட கால்பந்து ரசிகர்கள் கைது

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் போது வடகிழக்கு ரசிகர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட ரசிகர்கள் இருவரை காவல்துறை கைது செய்தது.
சென்னையின் எஃப்சி அணி நிர்வாகம் கொடுத்த புகாரின் பேரில், பெரம்பூரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், அயனாவரத்தைச் சேர்ந்த கார்த்திக் குமார் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர். இதில் கார்த்திக் குமார் கல்லூரி மாணவர் என்பதும், தமிழ்ச்செல்வன் தண்ணீர் கேன் போடும் வேலை செய்து வருகிறார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையின் எஃப்சி மற்றும் கவுகாத்தி அணிகள் மோதிய போட்டியின் போது, வடகிழக்கு ரசிகர்கள் முன் இருவரும் அநாகரீமாக நடந்து கொண்டனர்.