Published : 26,Nov 2017 02:27 PM
பள்ளி மாணவரின் தலைமுடியை வெட்டிய ஆசிரியை மீது புகார்

திருவாரூரில் பள்ளி மாணவரின் தலைமுடியை ஆசிரியை பிளேடால் மழித்ததாகப் புகார் எழுந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் குளிக்கரையைச் சேர்ந்த சுந்தர் என்பரின் மகன் சுரேந்தர். இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவர் அதிக தலைமுடியுடன் பள்ளிக்கு வந்ததாக கூறி, வகுப்பு ஆசிரியை விஜயா மாணவரின் தலைமுடியை சக மாணவனின் உதவிடன் மழித்ததாக குற்றசாட்டு எழுந்தது.
இதுகுறித்து புகார் தெரிவித்துள்ள மாணவரின் உறவினர்கள், இரண்டு நாட்களுக்கு முன்புதான் மாணவருக்கு முடிவெட்டி பள்ளிக்கு அனுப்பியதாகவும், அத்துமீறி செயல்பட்ட ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கிடையில் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.