Published : 26,Nov 2017 02:20 PM
பெண் ஆசிரியருக்கு ஆறுதல் கூறிய ராகுல்: வைரலாகும் காட்சி

குஜராத்தில் தம்மிடம் குறைகளை தெரிவித்த ஒரு ஆசிரியரை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி அரவணைத்து ஆறுதல் தெரிவித்த காட்சி இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
குஜராத்தில் நேற்று காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற ஆசிரியர்கள் கூட்டம் ஒன்றில் கலந்துகொண்ட ரஞ்சனா அவஸ்தி என்ற பெண் தமக்கு 22 ஆண்டுகள் ஆகியும் பணி நிரந்தரம் கிடைக்கவில்லை என்பது உள்ளிட்ட குறைகளை தெரிவித்தார். இதைகேட்டு உணர்ச்சிவசப்பட்ட ராகுல் காந்தி சில நேரங்களில், சில கேள்விகளுக்கு பதிலளிக்க நம்மிடம் வார்த்தைகள் இருக்காது என கூறி மேடையிலிருந்து இறங்கி அந்த பெண் இருந்த இடத்தை அடைந்தார்.
அந்தப் பெண்ணிடம் சிறிது நேரம் பேசிய ராகுல், அவரை அரவணைத்து ஆறுதல் கூறினார். ராகுல் காந்தியின் செயல் தம்முடைய கஷ்டங்களை முழுமையாக உணர்ந்துகொண்ட ஒரு இளைய சகோதரனுடையதைப்போல் இருந்ததாக ரஞ்சனா அவஸ்தி கூறினார். இந்த காட்சி இணையதளங்களில் வைரலாகி பரவி வருகிறது.