Published : 26,Nov 2017 02:04 AM

கொடிமரத்தில் அவசரமாக பொறிக்கப்பட்ட ஓபிஎஸ் பெயரிலும் சர்ச்சை

Again-controversy-in-ops-name

அதிமுக முப்பெரும் விழாவில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை என சர்ச்சை எழுந்த நிலையில், கொடிமர பெயர்பலகையில் அவரது பெயர் அவசரமாக பொறிக்கப்பட்டது. ஆனால் அதிலும் சர்ச்சை எழுந்துள்ளது.

மதுரை மாவட்டம் தோப்பூரில் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.கே.போஸ்‌ மற்றும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் ஏற்பாட்டில் அதிமுக முப்பெரும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட  முதலமைச்சர் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். ஆனால் அந்த கொடிமரத்திற்கு கீழ் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் இல்லை.

இவ்விவகாரம் குறித்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், அவசர அவசரமாக ஓ.பன்னீர்செல்வம் பெயரும் அந்த பெயர் பலகையில் பொறிக்கப்பட்டு, புதிய கல்வெட்டு நிறுவப்பட்டது. இந்நிலையில் அவர் பெயருக்கு கீழ் பொருளாளர் என்ற பொறுப்பு மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது, அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி பொறிக்கப்படவில்லை. இதனால் மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்