Published : 25,Nov 2017 12:14 PM
இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாளை முதல் 3 நாட்களுக்கு
வட தமிழகத்தில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மழை தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடனும், நகரின் ஓரிரு பகுதிகளில் மாழை அல்லது இரவில் லேசான மழை பொழிவுக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.