இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் முரளி விஜய், புஜாரா, விராட் கோலி ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்திய அணி 107 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 205 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கருணரத்னே 51 ரன்களும் கேப்டன் சண்டிமால் 57 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்களும், ரவீந்திர ஜடேஜா, இசாந்த் ஷர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி தொடக்க விக்கெட்டை விரைவில் இழந்தது. லோகேஷ் ராகுல் 7 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முதல் நாள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்தது. முரளிவிஜய், புஜாரா தலா 2 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இரண்டாவது நாள் ஆட்டம் இன்று காலை தொடங்கியது. நிதானமாக ஆடிய முரளி விஜய் சதம் அடித்தார். இது அவருக்கு 10-வது சதம். 128 ரன்கள் எடுத்த நிலையில் முரளி விஜய் ஆட்டமிழக்க கேப்டன் விராட் கோலி களமிறங்கினார். விராட் கோலி பவுண்டரிகளாக விளாச புஜாரா நிதானமாக விளையாடி 246 பந்துகளில் சதம் அடித்தார்.
அதிரடியாக விளையாடிய கோலி 70 பந்துகளில் அரைசதம் அடித்தார். இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்தது. புஜாரா 121, கோலி 54 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய அணி இன்று நாள் முழுவதும் விளையாடி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 301 ரன்கள் எடுத்துள்ளது.
தற்போது, இந்திய அணி 107 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இன்னும் 8 விக்கெட்டுகள் மீதமுள்ளதால் இந்திய அணி 500 ரன்களை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாகவே கருதப்படுகிறது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!