ஆர்.கே.நகர் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும்: மருதுகணேஷ்

ஆர்.கே.நகர் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும்: மருதுகணேஷ்
ஆர்.கே.நகர் தேர்தல் ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும்: மருதுகணேஷ்

தமிழக அரசின் மீதான மக்களின் கோபம், ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு உதவியாக அமையும் என அக்கட்சியின் வேட்பாளர் மருது கணேஷ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக மீண்டும் மருதுகணேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார். அண்ணா அறிவாலயத்தில்‌ மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில், மருதுகணேஷ் ஆ.கே.நகர் இடைத்தேதலில் திமுக வேட்பாளராக  தேர்வு செய்யப்பட்டார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். 

இதைத் தொடர்ந்து, அக்கட்சியின் செயல் தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து மருது கணேஷ் வாழ்த்துப் பெற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருது கணேஷ், ஆட்சி மாற்றத்திற்கு வித்திடும் வகையில் ஆர்.கே.நகரில் திமுகவின் வெற்றி அமையும் என்று கூறினார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com