[X] Close

ஆர்.கே. நகரில் இரவில் வீடுவீடாக பரப்புரை செய்யத் தடை

RKNagar-Election-propaganda-Stops-at-night--Election-Commission

ஆர்.கே. நகரில் மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை வீடு வீடாக பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிச.5 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அந்த தொகுதி காலியாக உள்ளது என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. அதன்படி தேர்தல் ஆணையம் ஏப்ரல் 14ஆம் தேதி தேர்தலை நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது.பணப்பட்டுவாடா புகாரின் காரணமாக ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் ஆர்.கே.நகரில் டிசம்பர் 21ம் தேதி தேர்தல் நடத்தப்படும் எனத் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. ஆர்.கே.நகரில் நேற்று முதலே, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. இந்நிலையில் ஆர்.கே.நகரில் மாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை வீடு வீடாக பரப்புரை செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வீதிகளில் கட்சிகள் சார்பில் தற்காலிக பூத் அமைத்து கட்சியினர் அமரத்தடை விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement

வெளியூர் வாகனங்கள் ஆர்.கே.நகருக்கு வந்தாலோ,காரணமின்றி நிறுத்தினாலோ பறிமுதல் செய்யப்படும். இரவு நேர பணப்பட்டுவாடாவை தடுக்க வீதிக்கு ஒரு துணை ரானுவப்படை வீரரை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் பரப்புரை வாகனங்களை முன் அனுமதியுடன் இயக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.ஆர்.கே. நகர் தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் இத்தகைய நடவடிக்கை எடுத்துள்ளது.


Advertisement

Advertisement
[X] Close