மெட்ரோ, பேருந்து, மின்சார ரயிலுக்கு ஒரே டிக்கெட்

மெட்ரோ, பேருந்து, மின்சார ரயிலுக்கு ஒரே டிக்கெட்
மெட்ரோ, பேருந்து, மின்சார ரயிலுக்கு ஒரே டிக்கெட்

சென்னையில் மாநகரப் பேருந்துகள் மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட்டில் பயணம் செய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

கருத்தரங்கம் ஒன்றில் பேசிய மெட்ரோ ரயிலின் நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் பன்சால், ஷேர் ஆட்டோவில் பயணம் செய்வதற்கு வசூலிக்கப்படும் தொகையளவிற்கே மெட்ரோ ரயில் கட்டணங்கள் உள்ளதாக கூறினார். ஆனால் மெட்ரோ ரயிலில் கூடுதலாக ஏசி வசதி இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். சென்னையில் மாநகர பேருந்துகள் மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்களில் ஒரே டிக்கெட் மூலம் பயணிப்பதற்கு வசதியாக தொழில்நுட்ப பணிகள் நடந்துவருவதாக கூறியுள்ளார்.

மெட்ரோ ரயில்நிலையங்களில் பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கார்டுகளை பேருந்து நடத்துனரின் வசமுள்ள டிக்கெட் வழங்கும் இயந்திரத்தில் பயன்படுத்தமுடியும் என்பது சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். விரைவில் இந்தத் திட்டம் அமலுக்கு வரும் எனவும் பங்கஜ்குமார் பன்சால் தெரிவித்தார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com