[X] Close

அடுத்த 3 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு ‌மையம் தகவல்

tamilnadu-rain-forecast

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியு‌ள்ளது. 

வடகிழக்குப் பருவமழை வலுப்பெறுவதற்கான சூழல் நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வங்கக் கடல் பகுதியில் ‌நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ‌மற்றும் மேலடுக்கு சுழற்சியும் வரும் நாட்களில் மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும் வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close