[X] Close

கிணற்றில் குதித்து பள்ளி மாணவிகள் 4 பேர் தற்கொலை

4-school-girl-suicide-in-vellore

வேலூர் மாவட்டம் சோளிங்கரை அடுத்த பணப்பாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் 4 மாணவிகள் ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீபா, மனிஷா, சங்கரி, ரேவதி ஆகிய 4 மாணவிகள், அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தனர். ஆசிரியர் திட்டியதால் மனமுடைந்த 4 மாணவிகளும் பிற்பகலில் வகுப்பில் இருந்து வெளியே வந்தனர்.

இந்நிலையில் பள்ளிக்கு அருகில் உள்ள விவசாய கிணற்றின் அருகே புத்தகப்பை, சைக்கிள்கள் இருப்பதால் சந்தேகம் அடைந்த மக்கள் இதுகுறித்து பணப்பாக்கம் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அப்போதுதான் மாணவிகள் 4 பேரும் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. ராணிபேட்டை, அரக்கோணம் தீயணைப்பு வாகனங்கள் மூலம் 4 மாணவிகளின் உடல்களும் அடுத்தடுத்து மீட்கப்பட்டன. பள்ளி மாணவிகள் 4 பேர் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close