கேரளா மாநிலம் வயநாடு வனப்பகுதியில் போலீசாரால் 3 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைவதை அடுத்து அங்கு அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்காமல் தடுக்க துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் 3 மாவோயிஸ்டுகள் கடந்த ஆண்டு நவம்பர் 24ம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டனர். தற்போது அந்த நிகழ்வு நடந்து ஓராண்டு நிறைவுபெற்ற நிலையில் சத்தியமங்கலம் மலைப்பகுதிகளில் மாவோயிஸ்டுகளால் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மாவோயிஸ்டுகள் ஊடுருவலை தடுக்கவும், தமிழகம் கர்நாடக எல்லையான ஆசனூர், தாளவாடி மற்றும் வனத்தையொட்டியுள்ள கடம்பூர், பவானிசாகர் ஆகிய காவல்நிலையங்களில் இன்று துப்பாக்கிய ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாவோயிஸ்டுகளை கண்காணிக்க கட்டப்பட்டுள்ள உயர்மட்ட கண்காணிப்பு கோபுரங்களில் அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து பண்ணாரி சோதனைசாவடி, மல்லியம்தூர்க்கம், குன்றி, கேர்மாளம், தாளாவடி, தலமலை, தெங்குமராஹாட ஆகிய வனப்பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் மாவோயிஸ்ட்டுகள் நடமாட்டத்தை கண்காணித்து அதனை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர். பவானிசாகர் நந்திகிராமத்தில் நடைபெற்ற நக்சல்தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு கூட்டத்தில் புதியதாக வரும் நபர் குறித்து தகவல் தெரிவிக்குமாறு போலீசார் கேட்டுக்கொண்டனர்.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்