
டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய விவசாயிகள் சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாகண்ணு தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தர்ணாவில் ஈடுபட்டனர். 5 ஏக்கர் நிலங்களுக்கு மேல் உள்ள விவசாயிகளின் கடன்களையும் மூன்று மாதங்களுக்குள் தள்ளுபடி செய்வதாக முதல்வர் உறுதியளித்ததாகவும், ஆனால் அந்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றாததால் முதலமைச்சரைப் பார்க்க அனுமதி வேண்டும் எனவும் அய்யாகண்ணு தெரிவித்தார். முதலமைச்சரை பார்க்க புறப்பட்ட விவசாயிகளை போலீசார் தடுத்து நிறுத்தியதால், விவசாயிகள் ரயில் நிலைய வளாகத்திலேயே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.