2வது டெஸ்ட் கிரிக்கெட்: 4 விக்கெட்டை இழந்தது இலங்கை!

2வது டெஸ்ட் கிரிக்கெட்: 4 விக்கெட்டை இழந்தது இலங்கை!
2வது டெஸ்ட் கிரிக்கெட்: 4 விக்கெட்டை இழந்தது இலங்கை!

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டை வீழ்த்தியுள்ளது. 

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. கொல்கத்தாவில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. 2 வது டெஸ்ட் போட்டி, நாக்பூரில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. அதன்படி அந்த அணியின் சமரவிக்ரமாவும் கருணாரத்னேவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 4.5-வது ஓவரில் சமரவிக்ரமாவின் விக்கெட்டை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. அவர் 13 ரன் எடுத்திருந்தார். அடுத்து வந்த திரிமன்னேவை அஸ்வின் போல்டாக்கினார். அவர் 9 ரன் எடுத்திருந்தார். ஜடேஜாவும் தன் பங்கிற்கு மேத்யூஸை எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார். 

இதையடுத்து கருணாரத்னே அரை சதம் அடித்தார். அவர் 51 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். பகல் 2.15 மணி நிலவரப்படி 4 விக்கெட் இழப்புக்கு இலங்கை அணி, 154 ரன்கள் எடுத்திருந்தது. சண்டிமால் 47 ரன்களுடனும் டிக்வெல்லா 18 ரன்களுடன் ஆடிவருகின்றனர். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com