சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு டிச.5 ஆம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அவரது மறைவுக்கு பிறகு அந்த தொகுதி காலியாக உள்ளது என தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. காலியான தொகுதிக்கு 6 மாத காலத்திற்குள் தேர்தல் அறிவிக்க வேண்டும் என விதி உள்ளது. அதன்படி தேர்தல் ஆணையம் ஏப்ரல் 14ஆம் தேதி தேர்தலை நடத்த திட்டமிட்டு அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டது. பரபரப்பாக பேசப்பட்ட ஆர்.கே.நகர் தேர்தலில் அதிமுக சார்பில் டிடிவி தினகரன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கங்கை அமரன் தேர்தலில் களமிறங்கினர். பணப்பட்டுவாடா புகாரின் காரணமாக ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி பங்கேற்கவுள்ளார். டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதி குறித்து ஆலோசிக்க உள்ளது. டிசம்பர் 14ஆம் தேதி ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனினும், இன்றைய கூட்டத்திற்கு பிறகே தேதியை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் எனத் தெரிகிறது.
Loading More post
``பேரறிவாளனை முதல்வர் கட்டியணைப்பது நல்லதல்ல”- பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
இந்திய அணியில் இடமில்லை - அதிருப்தியில் நிதிஷ் ராணா
`கிரண்தான் குற்றவாளி’- விஸ்மயா வழக்கில் கேரள நீதிமன்றம் உத்தரவு; நாளை தண்டனை விவரங்கள்
'எச்சில் பட்டத கொடுங்க!' - முஸ்லிம் எம்எல்ஏவும் பட்டியலின சாமியாரும் இனிப்பு உண்ட தருணம்
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
தினேஷ் கார்த்திக்கின் தீரா பசி - 18 ஆண்டுகால போராட்டமும் உலகக்கோப்பை கனவும்!
சறுக்கல்தான்; ஏமாற்றம்தான்; ஆனாலும் கம்பேக் கொடுப்போம்! - 2022 சிஎஸ்கே முழு ரிப்போர்ட்
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை