Published : 23,Nov 2017 04:33 PM
அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

டிசம்பர் 2-ஆம் தேதி நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் டிசம்பர் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 1-ம் தேதிக்கு பதிலாக டிச.,2-ம் தேதியை மிலாது நபி பொது விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு கடந்த சில தினங்களுக்கு முன் அரசாணை வெளியிட்டது. தலைமை ஹாஜியின் வேண்டுகோளை ஏற்று மிலாது நபி விடுமுறை மாற்றப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
டிசம்பர் 2-ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டதால் அன்றைய தினம் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2-ஆம் தேதிக்கு பதில் டிசம்பர் 5-ஆம் தேதி தேர்வு நடைபெறும் என தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.