
உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இருந்து இஸ்லாமிய அறிஞர்கள் 3 பேரை அடையாளம் தெரியாதவர்கள் அடித்துக் கீழே தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த குல்ஷார், அபுபக்கர், இஸ்ரர் மற்றும் ஆகிய இஸ்லாமிய அறிஞர்கள் ரயிலில் பயணம் செய்துகொண்டிருந்தனர். உத்தரப்பிரதேசம்-டெல்லி எல்லைப்பகுதியை ஒட்டிய பாக்பத் என்ற கிராமப்பகுதி அருகே ரயில் செல்லும்போது, அடையாளம் தெரியாத 6 நபர்கள் அந்த 3 இஸ்லாமியர்களையும் தாக்கியதுடன், ரயிலில் இருந்த கீழே தள்ளிவிட்டுள்ளனர். இதையடுத்து காயமடைந்த அவர்கள், அருகில் உள்ள பாக்பத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில், அடையாளம் தெரியாத 6 பேர் மீதும் வன்முறையை கையாண்டது, அத்துமீறி தாக்கியது மற்றும் கிரிமினல் குற்றங்களில் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் இந்த வழக்கை ரயில் காவல்நிலையத்திற்கு மாற்றியுள்ளனர். அந்த 3 பேரும் ஏன் தாக்கப்பட்டனர் என்ற காரணம் இதுவரை தெரியவில்லை.