நாளை வெளியாகிறது நோக்கியா 2 மொபைல்....விலை ரூ.6999

நாளை வெளியாகிறது நோக்கியா 2 மொபைல்....விலை ரூ.6999
நாளை வெளியாகிறது நோக்கியா 2 மொபைல்....விலை ரூ.6999

பிரபல மொபைல் நிறுவனமான நோக்கியா, நோக்கியா 2 என்ற புதிய மாடல் மொபைலை இந்தியாவில் நாளை வெளியிடுகிறது. 

நோக்கியா 2 மாடல் மொபைலின் விலை ரூ.6,999 ஆகும். இதுதொடர்பாக ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், நோக்கியா 2 மொபைல் அங்கீகாரம் பெற்ற செல்போன் கடைகளில் நாளை முதல் கிடைக்கும் என தெரிவித்துள்ளது. இந்த மொபைல் ஃபோன் காரிய/கருப்பு, காரிய/வெள்ளி மற்றும் செம்பு/கருப்பு ஆகிய 3 நிறங்களில் கிடைக்கும். 

இந்த மொபைல் ஃபோனை வாங்கும் வாடிக்கையாளர்கள் தொடக்க கட்டணமாக ரூ.1000 செலுத்தி, ஒரு வருடத்திற்கான காப்பீடு பெற்றுக்கொள்ளலாம். இதன் பேட்டரி திறன் 4,100 எம்ஏஎச் ஆகும். ஆண்ட்ராய்டு 7.1.1 என்ற குறீட்டில் வெளியாகும் இந்த ஃபோனை எதிர்காலத்தில் ஆண்ட்ராய்டு ஓரியோ தரத்திற்கும் மேம்படுத்திக் கொள்ளலாம். 
இதில் 5-இன்ச் டிஸ்ப்ளே, 1 ஜிபி ரேம், 8 ஜிபி உள்சேமிப்பு திறன் உள்ளது. அத்துடன் கூடுதலாக 128 ஜிபி வெளிசேமிப்பு திறனை இணைத்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. இதன் பின்புற கேமரா 8 மெகாபிக்ஸலுடனும், முன்புற கேமரா 5 மெகாபிக்ளலுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு சிம் கார்டுகளை பொருத்தும் வசதி கொண்ட இந்த மொபைல், 4ஜி தொழில்நுட்பத்துடன் வெளியாகவுள்ளது.  
 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com