
ஒடிஷா மாநில உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த நீதிபதி சத்ருகன புஜாரி சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இன்று பதவியேற்றார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஒடிசா மாநிலம் சோனேப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்ருகன புஜாரி, மாவட்ட நீதிபதி, விற்பனை வரி தீர்ப்பாயத் தலைவர், சட்டப்பணிகள் ஆணைக்குழு உறுப்பினர், சட்டத்துறை முதன்மை செயலர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவர். கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து ஒடிஷா மாநில உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக சத்ருகன புஜாரி பணியாற்றி வந்த நிலையில் கடந்த வாரம் இடமாற்றம் செய்யப்பட்டார்.